முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு
மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுயேச்சை வேட்பாளர்
மயிலாடுதுறை கூறைநாடு மீன் மார்க்கெட் சாலையை சேர்ந்தவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தம்பிதேவேந்திரன். இவருடைய மகன் விஜயேந்திரன். இவர் தி.மு.க., சார்பில் நகரசபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக 30-வது வார்டில் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளரான விஜயேந்திரன் தனது பெயருடன், சின்னத்தை அச்சிட்ட சுவரொட்டியை 30-ஆவது வார்டு பகுதியில் ஒட்டியதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இது குறித்து மயிலாடுதுறை போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பெயர் மற்றும் சின்னத்தை அச்சிட்டு சுவரொட்டி ஒட்டியதாகவிஜயேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைப்போல 34-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராமலிங்கம் பட்டமங்கல ஆராயத்தெரு பகுதியில் டிஜிட்டல் பேனர் வைத்ததாக கூறப்படுகிறது. அதில் ராமலிங்கம் தனது பெயருடன், சின்னத்தை விளம்பரப்படுத்தி உள்ளார். இவர் மீதும் மயிலாடுதுறை போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.