ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலி திருட்டுபோனது.
கரூர்
கரூர் வெங்கமேடு பகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 45). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று திண்ணப்பா கார்னரில் இருந்து வெங்கமேடு செல்லும் பஸ்சில் ஏறி சென்றுள்ளார். அப்போது சர்ச்கார்னர் அருகே சென்றபோது தனது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஜெயலட்சுமி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.