பிலிக்கல்பாளையம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி டிரைவருக்கு வலைவீச்சு
பிலிக்கல்பாளையம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி டிரைவருக்கு வலைவீச்சு
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் சாணார்பாளையம் கல்லங்காடு தங்காயி அம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எம்.சாண்டு (செயற்கை மணல்) ஏற்றி வந்த லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் திடீரென லாரியை பின்நோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொன்னுசாமி மீது லாரி மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொன்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.