பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மாசிமாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி:
மாசிமாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாத பிரதோஷம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த கோவில்களில் மூலவர் மற்றும் நந்திக்கு பல்வேறு பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி மூலவர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பு அலங்காரத்தில் சாமி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாம சுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மகாலிங்கேஸ்வரர் கோவில்
தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று தர்மபுரி ஹரிஹரநாத சாமி கோவில், அன்னசாகரம் சிவன் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரூர்
அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.