திண்டுக்கல்லில் போலீசார் கொடி அணிவகுப்பு
திண்டுக்கல்லில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே 2 முறை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று மீண்டும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய அணிவகுப்புக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், ராஜசேகர், இளஞ்செழியன் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பு முக்கிய சாலைகள் வழியாக சென்று ரெயில்நிலையம் அருகே நிறைவுபெற்றது.