தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

வால்பாறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடந்தது.

Update: 2022-02-14 13:43 GMT
வால்பாறை

வால்பாறையில் நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 3 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி விட்டதை தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்க முன்வரலாம் என்பதை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். 

வால்பாறை புதிய பஸ் நிலையம் பகுதி அருகே முடீஸ் எஸ்டேட் செல்லும் பிரிவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெகதீசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் அடங்கிய குழுவினர் 2 சக்கர வாகனம், ஆட்டோ, காய்கறிகள், மளிகை பொருட்கள் கொண்டு வரக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்