மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

வால்பாறை நகராட்சி தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இந்தப் பணியை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-14 13:02 GMT
வால்பாறை

வால்பாறை நகராட்சி தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது. இந்தப் பணியை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார். 

73 வாக்குச்சாவடிகள்

வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டு பகுதிகளில் 18 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 95 பேர் போட்டியிடுகின்றனர். வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 73 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 73 வாக்கு சாவடிகளிலும் பயன்படுத்துவதற்கு 88 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து பரிசோதனை செய்யும் பணி கடந்த 2 நாட்களாக தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடாசலம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் மண்டல அலுவலர்கள் மேற்கொண்டனர். 

வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடு

இதனை தொடர்ந்து சரிபார்க்கப்பட்ட 73 வாக்கு சாவடிகளுக்கான 73 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வால்பாறை நகராட்சி பகுதியின் தேர்தல் பார்வையாளரும் ஆனைமலை தமிழ்நாடு தோட்டக்கலை துறை உதவி இயக்குனருமான ஜமுனாதேவி முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் மண்டல அலுவலர்கள் ஒவ்வொரு வார்டு பகுதிக்கான எந்திரங்களில் பேட்டரிகள் பொருத்தி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாட்டை உறுதி செய்தனர்.
இதனையடுத்து அந்தந்த வார்டில் போட்டியிடும் அரசியல் கட்சியின் வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான பெயர் சின்னங்களை பொறுத்தி தேர்தல் பார்வையாளர் ஜமுனாதேவியிடம் காண்பித்து சரிபார்க்கப்பட்டது. .நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடாசலம், செல்வராஜ் ஆகியோர் இந்த பணியின் போது உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்