உடைந்து கிடக்கும் சிமெண்டு பெஞ்சு

உடைந்து கிடக்கும் சிமெண்டு பெஞ்சு

Update: 2022-02-14 10:42 GMT
மடத்துக்குளம் 

மடத்துக்குளம் தாலுகா செட்டியார் மில் பகுதியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  இந்த பகுதி மக்கள் உடுமலை, பழனி, தாராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிக்கு செல்ல இங்குள்ள பஸ் நிறுதத்தில் நின்று பஸ் ஏறி செல்கிறார்கள். 

இந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் அங்கு போடப்பட்டு இருந்த சிமெண்டு இருக்கையில் அமர்ந்து பஸ்சுக்காக காத்து இருப்பார்கள். ஆனால் தற்போது இந்த இருக்கைகள் முற்றிலும் உடைந்து விட்டன. இதனால் பயணிகள் இருக்கை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். எனவே புதிய இருக்கை அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பல்லடம் பகுதி கோழிப்பண்ணைகளில் நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் சில பண்ணையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்குகளில் கட்டி பல்லடம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள், ரோட்டோரங்களில், உள்ளிட்டவற்றில் வீசி சென்று விடுகின்றனர். 

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்துதல் ரோட்டோரங்களில் வீசிச் செல்லும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்