ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
காட்பாடி
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனைச்சாவடி அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்சில் ஏறி சோதனை செய்தனர்.
பஸ்சில் ஒரு பையில் பொட்டலமாக 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சுந்தர் ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.