தீவட்டிப்பட்டி அருகே கார் மோதி தொழிலாளி பலி

தீவட்டிப்பட்டி அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-02-13 21:24 GMT
ஓமலூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் முத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் சக்திவேல் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தீவட்டிப்பட்டிக்கு சென்றுவிட்டு அரூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 
தீவட்டிப்பட்டி அடுத்த சின்ன வடகம்பட்டி அருகே சென்ற போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்