கொரோனாவால் பாதிக்கப்பட்ட 379 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 379 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 11 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 15 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 55 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 131 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 248 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.