ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 20 பவுன் நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 20 பவுன் நகையை திருடி சென்றனர்.

Update: 2022-02-13 20:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 20 பவுன் நகையை திருடி சென்றனர். 
நகை திருட்டு 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியை  சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 60). சம்பவத்தன்று  இவர், தனது மகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பஸ்சில் வந்துள்ளார்.
 ராஜபாளையத்துக்கு தனது உறவினர் வீட்டுக்கு சென்று தனது பையில் இருந்த நகையை பார்த்தார். அப்போது பையில் இருந்த 20 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. 
பரபரப்பு 
இதுகுறித்து கோவிந்தம்மாள் ஸ்ரீ வில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்