கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு

கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிக்கப்பட்டது

Update: 2022-02-13 20:22 GMT
திருச்சி
திருச்சி பொன்மலை ரெயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவருடைய மகள் ஜெனிபர் டயானா (வயது 20). இவர், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கல்லூரியிலிருந்து பஸ்சில் வீடு திரும்பினார். பொன்மலை ஆர்மரிகேட் அருகே பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து பொன்மலை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் செல்போனை பறித்து விட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்