பஸ் மோதி மின்வாரிய ஊழியர் பலி

கடையநல்லூர் அருகே பஸ் மோதி மின்வாரிய ஊழியர் இறந்தார்.

Update: 2022-02-13 19:48 GMT
அச்சன்புதூர்:
சிவகிரி இல்லம் வடக்கு தெருவைச் சேர்ந்த காளியப்பன் மகன் கோவிந்தராஜ் (வயது 42). மாற்றுத்திறனாளியான இவர் கடையநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வந்தார். தற்போது கடையநல்லூரில் வசித்து வந்தார். இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று மோட்டார் சைக்கிளில் சிவகிரிக்கு சென்றுவிட்டு இரவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். புன்னையாபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக கோவிந்தராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சொக்கம்பட்டி போலீசார் விரைந்து சென்றனர். கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான கோவிந்தராஜ்க்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்