பறவைகள் கணக்கெடுக்கும் பணி

கூந்தன்குளத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

Update: 2022-02-13 19:35 GMT
இட்டமொழி:
கூந்தன்குளத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

பறவைகள் கணக்கெடுக்கும் பணி
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வனத்துறையினர் மூலம் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு முதல் கட்டமாக கடந்த 28, 29-ந் தேதிகளில் கடற்கரை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக நேற்று நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் திருப்புடைமருதூர் பறவைகள் பாதுகாப்பகம், விஜயநாராயணம், கழுவூர், காடன்குளம், ராமகிருஷ்ணாபுரம், மானூர், நாங்குநேரி, ராஜவல்லிபுரம் ஆகிய 18 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
ஒரு குழுவிற்கு 4 நபர்கள் பங்கேற்றனர். இந்த குழுவில் தன்னார்வலர்கள் மற்றும் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

கூந்தன்குளம்
கூந்தன்குளத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுக்கும் பணியை நெல்லை மாவட்ட வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முருகன் கணக்கெடுப்பு குறித்து பேசினார். இதில் வனச்சரக அலுவலர் கருப்பையா, வனவர்கள் அழகர்ராஜ், சங்கர்ராஜா மற்றும் உயிரியலாளர்கள் கந்தசாமி, ஸ்ரீதரன், வனப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
கூந்தன்குளத்தில் நடந்த கணக்கெடுப்பின்போது கூழைக்கடா, செங்கால் நாரை, நக்கி குத்தி நாரை, ஜொலிக்கும் அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன் நீர் காகம், கொக்கு வகைகள், செண்டு வாத்து, நாமக்கோழி போன்ற பறவைகள் அதிக எண்ணிக்கையில் கூடுகட்டி குஞ்சு பொறித்து வருவது தெரியவந்தது. 
வலசை பறவையான வரைதலை வாத்து வயல் வெளிகளிலும், வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்தில் பூநாரை பறவைகளும் காணப்பட்டன. 

மேலும் செய்திகள்