பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் நகரப்்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் வருகின்ற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு பொறையாறில் நேற்று நடந்தது.
சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு, மணிமாறன் ஆகியோர் முன்னிலையில் பொறையாறு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொறையாறு கடைவீதி வரை பேண்டு வாத்தியங்கள் முழங்க போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
இதில் பல்வேறு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் மகளிர் போலீசார் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.