கோவில் கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது அம்மன் சிலை கிடைத்தது

ஒண்ணுபுரம் கிராமத்தில் கோவில் கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது அம்மன் சிலை கிடைத்தது.

Update: 2022-02-13 18:20 GMT
கண்ணமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் பழமையான கச்சபேஸ்வரர் கோவில் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. 

இக்கோவில் வளாகத்தில் நவக்கிரக மற்றும் பைரவர் சன்னதி கட்ட நேற்று காலை அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கடியில் பழமையான அம்மன் சிலை சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

இச்சிலையை சுத்தம் செய்து அதே இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிலையின் இடுப்பு, பாதம் ஆகிய இடங்களில் உடைந்து காணப்படுகிறது. 

மேலும் செய்திகள்