போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

திருவையாறில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-02-13 18:03 GMT
திருவையாறு:
திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் இடையூறு இன்றி பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் திருவையாறு தேரடியில் தொடங்கியது. ஊர்வலத்தில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில்  துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார்(சமூக நீதி),  துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா(பயிற்சி) மற்றும்  போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், லதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானமுருகன், செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டனர். தேரடியில் தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

மேலும் செய்திகள்