திருச்செங்கோடு அருகே கார்-அரசு பஸ் மோதல்; டிரைவர் பலி

திருச்செங்கோடு அருகே கார்-அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

Update: 2022-02-13 17:58 GMT
எலச்சிப்பாளையம்:
கார்-அரசு பஸ் மோதல்
எலச்சிப்பாளையம் அருகே உள்ள மொஞ்சனூர் அரசம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32). திருமணமாகாத இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு காரில் பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. 
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
போலீசார் விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்