தொப்பூர் அருகே மனைவியை மதுபாட்டிலால் குத்திய தொழிலாளி கைது
தொப்பூர் அருகே மனைவியை மதுபாட்டிலால் குத்திய தொழிலாளி கைது
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள டி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (30). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த முனுசாமி ஆத்திரத்தில் மதுபாட்டிலை உடைத்து மனைவி என்றும் பாராமல் நந்தினியை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த நந்தினி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை நேற்று கைது செய்தனர்.