தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா படிப்படியாக குறைந்து வரும் பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த சில நாட்களாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

Update: 2022-02-13 17:43 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த சில நாட்களாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
தீவிர கண்காணிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தடுப்பூசி போடும் பணிகளும் மேலும் விரைவுபடுத்தப்பட்டன. அரசு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முககவசம் அணிதல் பொது இடங்களில் முககவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு முதல் டோஸ், இரண்டாம் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சிகிச்சை
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இந்த தொற்று காரணமாக 19 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். கண்டறியப்பட்டது. பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் உள்பட 439 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 104 பேர் நேற்று குணமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 36034பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 283-ஆக உள்ளது.

மேலும் செய்திகள்