பென்னிகுயிக்கிற்கு உதவியவர்களின் வாரிசுகள்
கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் நினைவு மண்டபத்துக்கு பென்னிகுயிக்கிற்கு உதவிய 6-ம் தலைமுறை வாரிசுகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
உத்தமபாளையம்:
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் வாழ்க்கை வரலாறு குறித்து உத்தமபாளையத்தை சேர்ந்த சந்தனபீர் ஒலி என்பவர் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை கட்டும்போது கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு உதவிய கூடலூர் பேயத்தேவர், முத்து இருளப்ப பிள்ளை, பழனியப்ப செட்டியார் ஆகியோரின் 6-ம் தலைமுறையை சேர்ந்த வாரிசுகள் உள்ளனர். அவர்களை லோயர்கேம்பில் உள்ள பென்னிகுயிக் நினைவு மணிமண்டபத்திற்கு சந்தனபீர் ஒலி அழைத்து வந்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், 6-ம் தலைமுறை வாரிசுகள் மற்றும் விவசாயிகளை இங்கிலாந்து நாட்டில் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறேன் என்றார்.