வட்டார தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்
வட்டார தேர்தல் பார்வையாளர்களுடன் தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
சிவகங்கை,
வட்டார தேர்தல் பார்வையாளர்களுடன் தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
வாக்குச்சாவடி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடை பெறுகிறது. இந்த தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 275 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதற்காக மாவட்டம் முழுவதும் 420 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டு உள்ளன.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 பணியாளர் வீதம்் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. இது தவிர ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சி தனித்தனியாக வட்டார அளவிலான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலின்போது இவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் தங்கவேலன், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேருராட்சிகளுக்கான வட்டார தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:- நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேவை யான அனைத்து பணிகளும் செய்யப்பட்டு உள்ளன. போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் பொருத்தப்பட்டுஉள்ளன.
தயார் நிலை
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் அவசர தேவைக்காக கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. தேர்தலை நடத்துவதற்கு தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.