கலைஞர்நகர் சமத்துவபுரம்- ஊமத்தநாடு சாலை சீரமைக்கப்படுமா?

சேதுபாவாசத்திரம் அருகே கலைஞர்நகர் சமத்துவபுரம்- ஊமத்தநாடு சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-02-13 17:07 GMT
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் அருகே கலைஞர்நகர் சமத்துவபுரம்- ஊமத்தநாடு சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தார்சாலை
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூக்கொல்லையில் இருந்து பெரியார் நினைவு சமத்துவபுரம் வழியாக ஊமத்தநாடு செல்லும், சுமார் 10 கி.மீ தார் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த வழியாக அரசு பஸ், மினிபஸ், தனியார் வாகனங்கள், விவசாய பயன்பாட்டுக்கான ஏராளமான கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இந்த சாலை கிழக்கு கடற்கரையை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது.
சீரமைக்க கோரிக்கை 
இந்த சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, சேதமடைந்து பல இடங்களில் குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. 
 சாலை பெயர்ந்து கப்பிசாலையாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு நடத்தி, சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்