‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதி அரவூர் ஊராட்சி அரவத்தூர் கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்குவதால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், வலங்கைமான்.
இருக்கை வசதி வேண்டும்
திருவாரூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகள் அமர்வதற்கு போதுமான இருக்கை வசதி இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் இருக்கை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-சாமி, திருவாரூர்.