தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பைகள்
தேனியை அடுத்த சருத்துப்பட்டி அம்பேத்கர் காலனியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஜித், சருத்துப்பட்டி.
வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்
கொடைக்கானல் 17-வது வார்டு காந்திபுரத்தில் தாழ்வான பகுதியில் சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், கொடைக்கானல்.
விபத்து அபாயம்
பழனி அருகே சிந்தலவாடம்பட்டி பகுதியில் சாலையோரங்களில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முட்செடிகள் இருப்பது தெரியாமல் சாலையோரமாகவே செல்கின்றனர். அப்போது முட்செடிகள் அவர்கள் மீது உரசி காயம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கனகராஜ், கணக்கன்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
பழனி அருகே கணக்கன்பட்டியில் இருந்து கோம்பைபட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஸ்வநாதன், ஆயக்குடி.