திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி 16 பேருக்கு பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் 16 பேர் பாதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதேநேரம் பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒற்றை இலக்கமாக சரிந்துள்ளது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.. இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 664 ஆனது. இதற்கிடையே 4 பெண்கள் உள்பட மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 37 ஆயிரத்து 390 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 77 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 408 ஆக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.