வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-02-13 14:25 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரின் மகன் தங்ககுமார் (வயது 20). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.
தங்ககுமாருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருந்து வாங்கி சாப்பிட்டும், சரியாகாமல் இருந்தது.
தற்கொலை
இதனால் வேதனை அடைந்த அவர், வீட்டில் உள்ளவர்களிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, `நான் தற்கொலை செய்து இறந்து விடுவேன்' என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தங்ககுமார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்