கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் செல்போன் பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.

Update: 2022-02-13 13:34 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் உள்ள சபரி கார்டன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது 32). இவர், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சாமிரெட்டி கண்டிகை பகுதியில் தொழிற்சாலையின் பஸ்சுக்காக ரோட்டில் காத்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், ராஜ்குமாரின் கையிலிருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரதி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் செல்போனை பறித்து சென்ற 2 மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்