படப்பை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

படப்பை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு குவிந்தனர்.

Update: 2022-02-13 13:15 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் புஷ்பகிரி பகுதிகளில் ஆக்கிரமி்ப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலேந்திரன், தாசில்தார் பிரியா ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டனர். 9 பொக்லைன் எந்திரங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள், 2 ஆம்புலன்ஸ் வண்டிகள் வரவழைக்கப்பட்டு படப்பை புஷ்பகிரி சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் 250-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அங்கு குவிந்தனர். மணிமங்கலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்