பெசன்ட்நகர் மயானபூமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நாளை திறப்பு: சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பெசன்ட்நகர் பிரதான சாலையில் இந்து மயான பூமி அமைந்துள்ளது. இதில் 2 எரிவாயு தகனமேடைகள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து வருகிற 14-ந்தேதி (நாளை) முதல் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.