கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபர் கொலை வழக்கில் ராணுவ வீரர் கைது
கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபர் கொலை வழக்கில் ராணுவ வீரரை கைது செய்த கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த 7-ந் தேதியன்று இரவு சக்தி (வயது 35) என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசார் கோயம்பேடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முருகேசன் (57) என்பதும், கடந்த 3 மாதமாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி சமையல் வேலை செய்து வந்த அவர், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தூங்கி கொண்டு இருந்த சக்தி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் முருகேசனை கைது செய்த கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.