தெப்ப தேரோட்ட விழா

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் தெப்ப தேரோட்ட விழா நடந்தது.

Update: 2022-02-12 20:50 GMT
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் இரவில் தெப்ப தேரோட்ட விழா நடந்தது. இதையொட்டி மாலையில் சங்கரன்கோவில் ஆவுடை பொய்கை தெப்பத்துக்கு எதிரே உள்ள மண்டபத்தில் சங்கரநாராயண சுவாமி- கோமதி அம்பாள் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

பின்னர் இரவில் சுவாமி- அம்பாள் ஆவுடை பொய்கை தெப்பத்தேரில் எழுந்தருளி, 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் அருணாசலம், உதவி ஆணையர் சங்கர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஆவுடை பொய்கை தெப்பத்தை அய்யப்ப சேவா சங்கம், செந்திலாண்டவன் திருச்சபை உள்ளிட்ட அமைப்பினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்