தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-12 20:21 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களைத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 55). விவசாயியான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்