போலீஸ் கொடி அணிவகுப்பு

பேரையூர், சோழவந்தான், அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.

Update: 2022-02-12 20:17 GMT
மதுரை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற உள்ள தேர்தலில் பொதுமக்கள் அமைதியாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில், போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினார்கள். கொடி அணிவகுப்பில் பேரையூர் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமையில் ஊர்வலம் பேரையூர், டி.கல்லுப்பட்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இந்த ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், காந்தி, மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
 சோழவந்தானில் சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் முன்னிலையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர். சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 46 நம்பர் ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக பஸ் நிலையம் வந்து சேர்ந்தனர். அலங்காநல்லூரில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டியில் பேரூராட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சிவபாலன், சிவகுமார், வசந்தி, உமாதேவி மற்றும் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 107 போலீசார் இந்த கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பு பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சந்தை பாலம், லாலா பஜார், பஸ் நிலையம், தபால் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ஜெமினி பூங்கா, போலீஸ் நிலையம் வரை திண்டுக்கல்-மதுரை நகர்ப்புற சாலையில் நடந்தது.

மேலும் செய்திகள்