உவரி புனித அந்தோணியார் ஆலய திருவிழா சிறப்பு ஆராதனை

உவரி புனித அந்தோணியார் ஆலய திருவிழா சிறப்பு ஆராதனை நடந்தது.

Update: 2022-02-12 19:47 GMT
திசையன்விளை:
உவரி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 12-ம் திருநாளான நேற்று இரவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது.

விழாவில் உவரி பஞ்சாயத்து தலைவர் தேம்பாவணி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராஜன், குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், ராதாபுரம் யூனியன் முன்னாள் துணை தலைவர் லெரின்ஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்