திண்டுக்கல்லில் வெயிலை விரட்டிய சாரல் மழை
திண்டுக்கல்லில் வெயிலை விரட்டும் வகையில் நேற்று சாரல் மழை பெய்து வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து விடிய, விடிய சாரல் மழை பெய்தபடி இருந்தது. இதனால் இரவு முழுவதும் நல்ல குளிர் நிலவியது. இந்த நிலையில் நேற்று காலையில் வானில் கார்மேக கூட்டம் திரண்டு காட்சி அளித்தது. இதனால் காலைநேர இளஞ்சூரியனின் ஒளிக்கதிர்களை காணமுடியவில்லை. இதற்கிடையே காலை 10 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாரல் மழை மாலை வரை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக பாடாய்படுத்திய வெயிலில் இருந்து மக்கள் தப்பினர். மேலும் பகல் முழுவதும் சாரல் மழை பெய்ததால் மலைப்பிரதேசம் போன்று இதமான குளிர் நிலவியது. இந்த குளிர் இரவிலும் தொடர்ந்ததால் மக்கள் குதூகலம் அடைந்தனர். இதேபோல் பழனி, கொடைக்கானல் உள்பட மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் திண்டுக்கல்லில் பகலில் பெய்த சாரல் மழை தேர்தல் பிரசாரத்தை வெகுவாக பாதித்தது. காலை முதல் மாலை வரை பெரும்பாலான வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு செல்லவில்லை. ஆனால் ஒருசில வேட்பாளர்கள் சாரல் மழையிலும் சளைக்காமல் பிரசாரத்தை தொடர்ந்தனர். மேலும் மாலையில் மழை நின்றதும் அனைத்து வேட்பாளர்களும் சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்தனர்.