ரூ.1.40 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ஸ்கூட்டரில் கடத்தி வந்தவர் கைது

குத்தாலம் அருகே ரூ.1.40 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ஸ்கூட்டரில் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-12 19:13 GMT
குத்தாலம்:
குத்தாலம் அருகே ரூ.1.40 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ஸ்கூட்டரில் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது ஸ்கூட்டரில் அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ஸ்கூட்டரில் 2 கிலோ எடை கொண்ட 5 கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டனர். இதையடுத்து அந்த நபரை தனிப்படையினர் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கஞ்சா கடத்தி வந்தவர் கைது
இதையடுத்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் குத்தாலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 38) என்பதும், அவர் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை ஸ்கூட்டரில் கடத்தி வந்ததும் தொிய வந்தது. 
இதையடுத்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்