டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-02-12 19:03 GMT
திருச்சி, பிப். 13-
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லங்குளம் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கல் அந்தோணி ராஜ். இவரது மகன் பிரவீன் ஜான்ரைட்டர் (வயது 20). கார் டிரைவரான இவர் 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி கட்டாயப்படுத்தி உள்ளார். தொடர்ந்து செல்போனில் பேசியும், சிறுமியுடன் எடுத்துக்கொண்ட புைகப்படத்தை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் காண்பித்து இவளை தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறி வந்துள்ளார். மேலும் இவரது தாய் அந்த சிறுமியிடம் சென்று மகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.  இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.  அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் பிரவீன் ஜான்ரைட்டர் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்