சவ ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதலில் 4 பேர் கைது
சவ ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் பஜனை கோவில் தெருவில் முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அவரது சவ ஊர்வலம் அகதிகள் முகாம் அருகே வந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே அகதிகள் முகாமில் வசிக்கும் சிலருக்கும் குடிமல்லூரைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட தகராறால் முன்விரோதம் இருந்து வந்தது.
சவ ஊர்வலத்தை சாதகமாக பயன்படுத்திய அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலர், சவ ஊர்வலத்தில் வந்த அந்த நபரிடம் திடீர் மோதலில் ஈடுபட்டனர்.
அதில் குடிமல்லூர் கிராம பஜனை கோவில் ெதருவைச் சேர்ந்த சேட்டுவின் மகன் முரளி (வயது 29), வடிவேலின் மகன் தினேஷ் (18) ஆகியோர் காயம் அடைந்தனர்.
மேலும் தகராறில் ஈடுபட்ட நவநீதன், விேனாத்குமார், சுந்தரபாண்டியன், நிஷாந்தன் ஆகிய 4 ேபர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான கரண், சங்கீத், சஜன் ஆகியோரை வாலாஜா போலீசார் தேடி வருகின்றனர்.