நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் வீழ்ச்சி-425 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு, 425 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
15 காசுகள் வீழ்ச்சி
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக வீழ்ச்சி உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-450, ஐதராபாத்-385, விஜயவாடா-415, மைசூரு-430, மும்பை-450, பெங்களூரு-430, கொல்கத்தா-468, டெல்லி-430.
பிற மண்டலங்களில் விலை குறைவு
பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை குறைந்ததால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு தினமும் அனுப்பி வைக்கப்படும் 50 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்து வருகிறது. அதே நேரத்தில் முட்டை உற்பத்தியும் தினமும் 50 லட்சம் வரை அதிகரித்து இருப்பதால் தமிழக கோழிப்பண்ணைகளில் கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
எனவே விற்பனையை அதிகரிக்க முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டையின் கொள்முதல் விலை 6 நாட்களில் 35 காசுகள் குறைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
கறிக்கோழி விலை உயர்வு
கறிக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் கறிக்கோழி விலை கிலோ ரூ.98 ஆக அதிகரித்துள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.64-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.