கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2022-02-12 17:44 GMT

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சோத்தூர் கிராமத்தில் உள்ள களக்காடு வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 4 பிளாஸ்டிக் டிரம்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்