ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசி தெப்ப திருவிழா கொடியேற்றம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்திருப்பேரை:
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதியும், குருவுக்கு அதிபதியானதுமான ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதா் ஆழ்வார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கும்ப பூஜை, கொடி பூஜை நடைபெற்றது. பின்னா் நகா்வலம் வந்த கொடிப்பட்டம் மங்கள வாத்தியங்கள் முழங்க நம்மாழ்வாா் சன்னதி முன் அமைந்த கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுவாமி நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறாா். 5-ம் திருநாள் கருட சேவையும், 9-ம் திருநாள் தோ்த்திருவிழாவும், 10, 11 ம் திருநாள் நம்மாழ்வாா் தெப்பத்திருவிழாவும், தொடா்நது தீா்த்தவாாரியும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அஜித் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.