கடலில் தத்தளித்த மான்
கடலில் தத்தளித்த மானை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் காட்டு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்ததால் மேய்ச்சலுக்கான மேடான பகுதிக்கு சில மான் வந்துள்ளது. இந்த மானை பார்த்த நாய்கள் கடிக்க துரத்தியதால், அந்த மான் கடலுக்குள் சென்று தத்தளித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலா் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் படகு மூலம் சென்று கடலில் தத்தளித்த மானை உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.