மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்
இளையான்குடி அருகே மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், ஞான சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கைத்தறி போர்வை அணிவித்து ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் டேமியன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ஊனம் தடுப்பு முறைகள் குறித்து பேசினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சேராமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.