வன துர்க்கை கோவிலில் சிறப்பு வழிபாடு
வன துர்க்கை கோவிலில் சிறப்பு வழிபாடு
குடவாசல்:-
குடவாசல் அருகே உள்ள மனப்பறவை இஞ்சி கொல்லையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் வேம்பு குருக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.