ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் மலர் அஞ்சலி

காந்தியடிகள் அஸ்தி கரைத்த தினத்தையொட்டி ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2022-02-12 16:05 GMT
ராமேசுவரம், 
ராமேசுவரத்தில் கடந்த 1949-ம் ஆண்டு முதல் காந்தியடி களின் அஸ்தி கரைத்த தினமான பிப்ரவரி மாதம் 12-ந் தேதி முதல் சர்வோதய மேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ராமேசுவரத்தில் நேற்று சர்வோதய மேளா கமிட்டியின் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைத்த தினத்தை யொட்டி 74-வது ஆண்டு சர்வோதய மேளா நிகழ்ச்சி  நடந்தது. சர்வோதய மேளா கமிட்டி தலைவர் ஆண்டியப்பன் தலை மையில் பொருளாளர் பாலகார்த்திகேயன், மதுரை மாவட்ட சர்வோதய சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்ட சர்வதேச கமிட்டியின் நிர்வாகிகள் அக்னி தீர்த்த கடலில் காந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மலர் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தனர்.

மேலும் செய்திகள்