மன்னார்குடி:-
திருவாரூர் மாவட்ட பா.ஜனதா சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாவட்ட செயலாளர் பால.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அறிவுராம், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.என்.செல்வம், மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகி கமாலுதீன், நகர தலைவர் ரகுராமன், நகர பொதுச்செயலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.