வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
திருத்துறைப்பூண்டி:-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுகட்டி செங்குளம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது65). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய வீட்டு சமையலறைக்குள் நேற்று 10 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகானந்தம் தலைமையில் அங்கு விரைந்து சென்று பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.