தலைமறைவான 3 பேர் திருப்பூரில் கைது
குடும்ப தகராறில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாக இருந்த கீழக்கரையை சேர்ந்த 3 வாலிபர்களை குற்ற தனிப்படையினர் திருப்பூரில் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
குடும்ப தகராறில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாக இருந்த கீழக்கரையை சேர்ந்த 3 வாலிபர்களை குற்ற தனிப்படையினர் திருப்பூரில் கைது செய்தனர்.
முன்விரோதம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுகிழக்குத்தெருவை சேர்ந்தவர் செய்யது முகம்மது மகன் ராசிக்ரகுமான் (வயது35). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த நல்ல முகம்மது மகன் இஸ்மாயில் (32) என்பவருக்கும் குடும்ப பிரச்சினை காரண மாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் ராசிக்ரகுமான் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து ராசிக்ரகுமான் அளித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த னர். இந்த சம்பவத்தில் இஸ்மாயில் இடையே பிரச்சினை காரணமாகத்தான் இந்த தாக்குதல் நடந்ததாக ராசிக்ரகுமான் தரப்பில் கூறப்பட்டது. நீண்ட நாட்களாக இந்த வழக்கில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படாமல் இருந்து வந்தனர்.
உத்தரவு
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய குற்ற தனிப்படையினருக்கு உத்தரவிட்டார். இதன்படி குற்ற தனிப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு திருப்பூர் பகுதி யில் பதுங்கி இருந்த கீழக்கரை புதுக்கிழக்குத்தெரு ஜாகிர் உசேன் மகன் சதாம்உசேன் (36), சீனி முகம்மது மகன் கை முகம்மது கான் (27), கீழக்கரை பாரதிநகர் திருக்குமரன் மகன் நவநீதகிருஷ்ணன் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்தனர்.